செய்திகள்உள்நாட்டுநாளாந்தம் 10 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

நாளாந்தம் 10 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து நாளாந்தம் 10 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இரண்டு கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள ஏனைய மூன்று பண்ணைகளில் இருந்தும் முட்டைகளை கொள்முதல் செய்ய கால்நடை உற்பத்தி திணைக்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்நாட்டில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குச் சென்ற கால்நடை உற்பத்தித் திணைக்களம் மற்றும் அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் மூன்று அதிகாரிகள் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் மேலும் மூன்று பண்ணைகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு பத்து இலட்சம் வீதம் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles