Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம்

ஊவா மாகாணத்திலுள்ள ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ பீட கல்விச் செயற்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வருட உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட முடிவுகள் வெளியாகிய பின்னர் 50 மாணவர்களை முதன்முறையாக மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழகத்திற்கு நேற்று முன்தினம் (27) கண்காணிப்பு செய்ய சென்றிருந்த அமைச்சர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகளுக்காக 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திலிருந்து ரூ. 200 பில்லியனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் ஒதுக்கியுள்ளார். அத்துடன் பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆய்வகங்கள், சம்பந்தப்பட்ட பட்டப் படிப்புகளில் நடைமுறைப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும்.

இப் பல்கலைக்கழகத்தின் அடிப்படை திட்டங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மருத்துவ பீட மாணவர்களின் பயிற்சிகளுக்காக, பதுளை மாகாண வைத்தியசாலை சுகாதார அமைச்சினால் போதனா வைத்தியசாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles