மத தத்துவம் மற்றும் கலாசாரத்தை அவமதித்ததாக கூறப்படும் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
“மோடாபிமானய” என்ற மேடை நிகழ்ச்சியில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து சமூகத்தில் விவாதம் எழுந்ததுடன், அந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டனர்.