Tuesday, December 23, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் நேரடி தலையீட்டின் கீழ் இயங்கும் JEDB எனப்படும் மக்கள் தோட்டங்கள் அபிவிருத்தி சபை மற்றும் எஸ் எல் எஸ் பி. சி எனப்படும் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகியவற்றுக்குட்பட்ட காணிகளை தலா ஒரு ஏக்கர் வீதம் 30 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நேரடி தலையீட்டின் கீழ் இயங்கும் JEDB எனப்படும் மக்கள் தோட்டங்கள் அபிவிருத்தி சபை மற்றும் எஸ் எல் எஸ் பி. சி எனப்படும் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் என்பனவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில், நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில், குறித்த பெருந்தோட்ட யாக்கத்திற்குட்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலுகுமார், சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், JEDB எனப்படும் மக்கள் தோட்டங்கள் அபிவிருத்தி சபை மற்றும் எஸ் எல் எஸ் பி. சி எனப்படும் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் என்பனவற்றுக்கு உட்பட்ட காணிகளை வெளியாருக்கு குத்தகைக்கு வழங்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles