Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமுர்த்தி வங்கிகள் ஒழுங்குபடுத்தப்படும் - ஷெஹான் சேமசிங்க

சமுர்த்தி வங்கிகள் ஒழுங்குபடுத்தப்படும் – ஷெஹான் சேமசிங்க

சமுர்த்தி வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நம்பகமான வெளிப்படையான அமைப்பை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அஸ்வெசும’ நலப் பலன்கள் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவித் தொகைகள் பெறுவோரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்.

கடந்த வாரம் நாடாளுமன்றம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்ததையடுத்து, ஜூலை முதலாம் திகதி முதல் புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.

இதன்படி, எதிர்காலத்தில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான அரச நிதி சமுர்த்தி வங்கிகளின் ஊடாக செலுத்தப்படாது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சேமசிங்க,? சமுர்த்தி வங்கிகள் வெறுமனே நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக செயற்பட முடியாது எனவும்இ பரந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles