Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயன்ற 11 பேர் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயன்ற 11 பேர் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது ஆண்களையும் இரண்டு பெண்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் 36 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவராவார்.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31, 36, 33, 34 மற்றும் 22 வயதுடையவர்களாவர்.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles