Tuesday, June 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெமட்டகொடையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

தெமட்டகொடையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

தெமட்டகொடையில் உள்ள ரயில் சாலைக்குள் பிரவேசித்து அங்கிருந்த பொருட்களை திருட முற்பட்ட மூவரை கைது செய்வதற்காக ரயில் பாதுகாப்பு தரப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியையும் ஒருவர் கைப்பற்ற முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை கட்டுப்படுத்தி கைது செய்யும் வகையில், பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டடுள்ளனர்.

அத்துடன் மற்றுமொரு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் ரயில் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் டீசல், ரயில் உதிரி பாகங்கள் மற்றும் செப்பு கம்பிகளை திருடிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles