Tuesday, June 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழ் எம்.பிகளை மீண்டும் சந்திக்க ஜனாதிபதி இணக்கம்

தமிழ் எம்.பிகளை மீண்டும் சந்திக்க ஜனாதிபதி இணக்கம்

நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதியும் நேற்றைய தினமும் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஜனாதிபதியுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது மாகாணங்களுக்கு அதிக்கூடிய அதிகாரங்களை வழங்கி விரைவில் அதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமதுச் செய்தி சேவைக்கு தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles