Monday, November 10, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைதிகள் 63 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கைதிகள் 63 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறைச்சாலையை சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு சிகிச்சை மற்றும் கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் நடத்திய போராட்டத்தின் போது அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது, ​​சிறைச்சாலையின் கட்டிடங்களை எரித்தும், தாக்கியும் கைதிகள் ஒரு கோடியே எழுபத்து நான்கு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, போராட்டத்தின் போது சிறைச்சாலையில் சேகரிக்கப்பட்ட சுமார் 19 இலட்சம் ரூபா உணவுப்பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன.

2022 நவம்பர் 30 அன்று மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையில் 11 கைதிகள் மரணித்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles