Monday, June 29, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகையிருப்பில் உள்ள அரிசியை கால்நடை தீவனத்துக்காக பயன்படுத்தாதீர்

கையிருப்பில் உள்ள அரிசியை கால்நடை தீவனத்துக்காக பயன்படுத்தாதீர்

இந்த ஆண்டுக்கான நெல் அறுவடை முடியும் வரை தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த பரிந்துரைகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.

2021 மஹா பருவத்தில் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் சோளச் செய்கையின் விளைச்சல் 90,000 மெற்றிக் டன்களாகக் குறைவடைந்தது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கால்நடை தீவனத்திற்கான சோளத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை யால பருவம் வரை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles