Tuesday, April 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபருடன், கஞ்சா கலந்த 25 போதைப்பொருள், 202 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 20,500.00 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15, அளுத் மாவத்தை வீதியில் வசிக்கும் 47 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles