செய்திகள்உள்நாட்டுவேன் – கார் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயம்

வேன் – கார் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயம்

குருநாகல் புத்தளம் வீதியில் வாரியபொல வெரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகலில் இருந்து சென்ற வேன் ஒன்றும் பாதெனிய பகுதியில் இருந்து சென்ற கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரும் காரில் பயணித்த தம்பதிகளுமாக 8 பேர் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து அவர்கள் 8 பேரும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்தவர்கள் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், காரில் பயணித்தவர்கள் மஹவ பகுதியைச் சேர்ந்த தம்பதியர் எனவும் தெரிவித்துள்ள வாரியபொல போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles