Wednesday, March 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரத்மலான குடு அஞ்சுவுக்கு பிரான்ஸில் சொகுசு விடுதி

ரத்மலான குடு அஞ்சுவுக்கு பிரான்ஸில் சொகுசு விடுதி

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் பலம் பொருந்திய பாதாள உலக தலைவர் ரத்மலான குடு அஞ்சு எவ்வாறு பிரான்ஸில் அகதியாக வசித்து, எவ்வாறு வர்த்தகத்தினை முன்னெடுத்தார் என்பது தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பண மோசடியின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் சொகுசு விடுதியொன்றை வாங்கிய குடு அஞ்சு அதனை தனது மனைவி எனக்கூறப்படும் பிரெஞ்சு பெண்ணின் பெயரில் பதிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரத்மலானே குடு அஞ்சு உணவகத்தை வாங்கி குறித்த பிரான்ஸ் யுவதிக்கு கொடுத்து “நமஸ்தே” என்ற பெயரில் விடுதியை நடத்தி வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடுதியில் அடிக்கடி விருந்துபசாரங்கள் நடைபெறுவதாகவும், இதில் குடு அஞ்சுவின் பிரான்ஸ் நாட்டு மனைவி நடன மங்கையாக பங்கேற்று வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ள்து.

இதுதவிர பிரான்ஸ் நாட்டின் போர்டோக்ஸ் பகுதியில் வேறு ஒருவரின் பெயரில் வயின் தொழிற்சாலையையும் அவர் நடத்தி வந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும், பாதாள உலக செயற்பாட்டாளர்களாகவும் கருதப்படும் ஜூட் பிரியந்த மற்றும் பதுவத்த சாமர ஆகியோருக்கு ரத்மலான அஞ்சு பிரான்ஸில் அடைக்கலம் அளித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரத்மலானே குடு அஞ்சுவுக்கு துபாயில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, நலவாழ்வு மையம், சொகுசு விடுதி மற்றும் கட்டடத்தொகுதிளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles