Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் பிணை

இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் பிணை

பாகிஸ்தானில் அரசாங்கம் கருவூல பரிசு பொருட்களை முறைகேடாக விற்றது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவரை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இது குறித்து பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது 121 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த சூழலில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேற்று ஆஜரானார்.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் சிறப்பு அனுமதியை பெற்று இம்ரான் கான் பேசும்போது, எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. எனினும் 7 வழக்குகளில் இம்ரான் கானுக்கு 10 நாட்கள் இடைக்கால பிணையும், மேலும் 2 வழக்குகளில் 5 நாட்கள் பிணையும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles