2,419 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு உத்தேசித்திருந்தபோதிலும் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் கூறப்படுகின்றது.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் அண்மையில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பழைய நிலை மாற்றப்பட்டு, எதிர்காலத்தில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்குப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இதன்படி எதிர்காலத்தில் பெண் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தோன்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.