Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாகிஸ்தானுக்கு யானைகள் பரிசளிப்பு? மறுக்கும் இலங்கை அரசாங்கம்

பாகிஸ்தானுக்கு யானைகள் பரிசளிப்பு? மறுக்கும் இலங்கை அரசாங்கம்

பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை அன்பளிப்பாக வழங்கப்போவதாக வெளியான செய்தியை இலங்கை மறுத்துள்ளது.

கராச்சி மற்றும் லாகூர் விலங்கியல் பூங்காக்களுக்கு இந்த இரண்டு யானைகளும் அனுப்பப்படவுள்ளதாக, பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பாகிஸ்தானின் விலங்கியல் பூங்காவில் 17 வயதான ஆபிரிக்க யானையான நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்தே, இலங்கை இரண்டு யானைகளை பரிசாக வழங்குவது குறித்த செய்திகள் வெளியாகின.

எனினும், ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரித்துள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானின் மிருகக்காட்சிசாலைகளில், விலங்குகள் உரியமுறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles