Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி

வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி

அம்பலாங்கொட நகர்-காலி வீதியில் இன்று (25) காலையில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட-ஊரவத்த பிரதேசத்தில் வசிக்கும் அம்பலாங்கொடை மாநகர சபையின் ஊழியரான லகீஷா யசஸ்வி என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை மாநகர சபையில் வருவாய் நிர்வாகியாக கடமையாற்றுவதுடன், தனது குழந்தையை முன்பள்ளிக்கு விடுவதற்காக அம்பலாங்கொட, உரவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles