Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகனின் தாக்குதலில் தந்தை பலி - தாய் படுகாயம்

மகனின் தாக்குதலில் தந்தை பலி – தாய் படுகாயம்

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் – கொழுந்து புலம்பு பகுதியில் மகனின் தாக்குதலினால் தந்தை உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்துள்ளார்.

தந்தை, தாய் மற்றும் மகனுக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது, இடைநடுவே உயிரிழந்தார்.

தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர் 60 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles