Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடனை மீள செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்

கடனை மீள செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்

இலங்கை தமது கடனை மீள செலுத்துவதற்கான காலத்தை, பங்களாதேஷ் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.

இலங்கைக்கு, பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அதன் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கோரியிருந்தது

அதற்குள் தமது கடனை மறுசீரமைக்க முடியும் என்று நம்பியிருந்த போதிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில், இலங்கை மேலும் 6 மாத கால அவகாசம் கோருகிறது

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முதல் தவணையையும் செப்டெம்பர் மாதத்திற்குள் மற்றொரு தவணையையும் செலுத்துவதாக இலங்கை உறுதியளித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ர{ஃப் தாலுக்டர் கூறினார்.

அதற்கு அப்பால் கால நீடிப்பு அவசியம் இல்லையென இலங்கை ஆளுநர் தெரிவித்துள்ளதாக தாலுக்டர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles