மத்திய வங்கி ஆளுநரும், நாட்டின் தலைவர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும், குறை கூறாமல் இருக்க வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஒன்பது வருடங்களாக இந்த வேலையை நான் செய்தேன். நான் எப்போதாவது ஒரு நாள் புகார் செய்திருக்கிறேனா அல்லது அழுதிருக்கிறேனா? போரையும் மீறி நாங்கள் எங்கள் பணியை செய்தோம். அதுதான் மத்திய வங்கி ஆளுநருக்கும் நாட்டின் தலைவர்களுக்கும் தேவை”
“இனி எங்களிடமோ அல்லது இந்த நாட்டின் தலைவரிடமோ பேசுவதில் அர்த்தமில்லை. வொஷிங்டனில் நீங்கள் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும், ஏனெனில் அவர்கள் இப்போது நம் நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்றார்.