Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுவதியின் துண்டாக்கப்பட்ட கையை பொருத்திய வைத்தியர்கள்

யுவதியின் துண்டாக்கப்பட்ட கையை பொருத்திய வைத்தியர்கள்

உறவினர்களுக்கிடையிலான தகராறில் கை துண்டிக்கப்பட்ட யுவதியின் கையை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான தகராறு எல்லை மீறி சென்றதையடுத்து 21 வயதான யுவதி மீது மன்னா கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலில் யுவதியின் இடது கையின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், யுவதியின் துண்டிக்கப்பட்ட கையின் பாகம் ஐஸ் பையில் வைக்கப்பட்டு யுவதி உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினர் உடலிலிருந்து பிரிந்த கையை பொருத்த சத்திர சிகிச்சையை ஆரம்பித்தனர்.

உதவி வைத்தியர்கள், மயக்க மருந்து நிபுணர், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார உதவிக் குழுக்கள் மற்றும் இரத்த வங்கியின் உதவியினால் யுவதியின் கை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன அத தெரணவிடம் தெரிவித்தார்.

சத்திரசிகிச்சையின் பின்னர் யுவதி கேகாலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யுவதியின் நிலைமை படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles