Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுமதி பத்திரமின்றி மாடுகளை இறைச்சிக்காக கடத்திய நபர் கைது

அனுமதி பத்திரமின்றி மாடுகளை இறைச்சிக்காக கடத்திய நபர் கைது

நுவரெலியாவில் அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச்சென்ற லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பேவெல பகுதியிலிருந்து நானுஓயாவிற்கு மாடுகளை இறைச்சிகாக கொண்டுச் சென்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த லொறிக்குள் கால்களை முறிக்கப்பட்ட நிலையில் இருந்த மூன்று மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles