Wednesday, March 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதை மாத்திரைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

போதை மாத்திரைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 56 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் களுத்துறை தெற்கு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles