Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பறந்த பெட்மேன்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பறந்த பெட்மேன்

பெட்மேன் நடிகர் கிறிஸ்டியன் பேல் கொழும்புக்கும் மாலைதீவுக்கும் இடையில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமான பணிக்குழாமினருடன் புகைப்படத்துக்கு தோன்றியுள்ளார்.

அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் மாலைத்தீவு நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

அவர் யூ. எல் 115 விமானத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிக்குழாமினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

‘புகழ்பெற்ற நடிகரான கிறிஸ்டியன் பேலை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அவரது பயணத்தில் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை அவருக்கு வழங்கியதில் எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி.

விரைவில் அவரை மீண்டும் வரவேற்போம் என எதிர்பார்க்கிறோம்’ என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஹொலிவூட் நடிகர் கிறிஸ்டியன் பேல், பெட்மேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

அவர் மார்வெல் ஸ்டுடியோஸ் திரைப்படமான தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) இல் கோர் தி கோட் புட்சர் என்ற வில்லனாக நடித்தார்.

ஒஸ்கார் விருது மற்றும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles