Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபட்டப்பகலில் மது விருந்து- 11 பேர் கைது

பட்டப்பகலில் மது விருந்து- 11 பேர் கைது

கடுவெல-ரணால பகுதியில் இடம்பெற்ற போதைப்பொருள் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 11 பேரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 7 ஆண்களும் 4 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 6.850 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 28-48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அத்துருகிரிய, வத்தளை, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஏனையவர்கள் 25-44 வயதுடைய ரணால, பியகம, மருதானை, ஹோகந்தர, அதுருகிரிய, வத்தளை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபரான “சோரா” என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (04) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles