Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலுக்கான நிதியை விடுவிப்பதில் சிரமம் - ஷெஹான் சேமசிங்க

தேர்தலுக்கான நிதியை விடுவிப்பதில் சிரமம் – ஷெஹான் சேமசிங்க

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை விடுவிப்பதில் அரசாங்கத்திற்கு சிரமம் இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (03) ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரமானது இன்னும் நிதியை விடுவிப்பதற்கு தேவையான மட்டத்திற்கு ஸ்திரப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பலதரப்புக் கடன்களை மீளச் செலுத்துதல்இ அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு போன்ற நலன்புரி கொடுப்பனவுகள் போன்ற கட்டாய கொடுப்பனவுகளை அரசாங்கம் மிகவும் இக்கட்டான நிலையில் வழங்குகின்றது.

பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் மீளவில்லை என்பதுடன் தேர்தல் ஆணையகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விவாதித்து ஒருமித்த கருத்துக்குக்கு வர வேண்டும்.

அரசாங்கம் என்ற வகையில் எங்களுக்கு பொருளாதாரத்தில் முழு ஸ்திரத்தன்மை தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles