மீன் விலை 25 வீதம் அளவில் குறைவடையக்கூடும் என பேலியகொடை மத்திய கடலுணவு வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே கூறியுள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால், முன்னர் கடற்றொழிலுக்கு செல்லாதிருந்தவர்கள், தற்போது தங்களது தொழிலை மீள ஆரம்பித்துள்ளனர்.
இதனால், கடலுணவுகள் அதிகளவில் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.