Tuesday, March 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலவச உணவுத்திட்டம்: விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவு கிடைக்கவில்லையாம்

இலவச உணவுத்திட்டம்: விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவு கிடைக்கவில்லையாம்

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கான அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள விநியோகஸ்தர்கள் குழுவொன்றுக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தியம்மாகம கனிஷ்ட கல்லூரிக்கு உணவு விநியோகம் செய்யும் குழுவினரே இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பிராந்திய கல்வி அலுவலகத்திடம் வினவியபோது, கிடைத்த பணம் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சில சமயங்களில் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles