Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF இன் ஆலோசனைக்கமைய எரிபொருள் விலைச்சூத்திரம் அறிமுகம்

IMF இன் ஆலோசனைக்கமைய எரிபொருள் விலைச்சூத்திரம் அறிமுகம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆலோசனைக்கு அமைய அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் அமைச்சு இந்த சூத்திரத்தை அமுல்படுத்தும் என தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) பெற்ற இலாபம் அல்லது நட்டத்துடன், எரிபொருளின் மீது விதிக்கப்படும் உண்மையான வரித் தொகை மற்றும் விலையை அதிகரிப்பது அல்லது குறைப்பது ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான ஒரு முறையாக புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த ஆட்சியில் அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் வழிகாட்டலின் கீழ் எரிபொருள் விலை சூத்திரத்தை பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சூத்திரம் இதுவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles