தற்போது தடுப்புக்காவலில் உள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை வெளியே அழைத்து செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பான வழக்கு இன்று (29) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து வெளியே அழைத்து செல்லப்படும்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரையும்இ விசாரணைப் பிரிவின் நிலையத் தளபதியையும் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.