பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த கைதி நேற்று (28) நீதிமன்ற அறையின் ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் திருட்டு குற்றச்சாட்டில் கைதான பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் மீது சுமார் 30 போதைப்பொருள் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தப்பியோடிய கைதியை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.