Friday, December 19, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாப்புறுதி நிறுவன பெண் ஊழியர்கள் மூவர் துஷ்பிரயோகம்

காப்புறுதி நிறுவன பெண் ஊழியர்கள் மூவர் துஷ்பிரயோகம்

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று (28) புத்தளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles