ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன, தடுப்புக் காவலில் இருக்கும் போது தனது பாதுகாப்பைப் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவராகவோ அல்லது சந்தேகநபராகவோ குறிப்பிடப்பட்டுள்ள எந்த வழக்கிலும் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு மனுதாரர் மேலும் கோரியுள்ளார்.
சட்டத்தரணிகளான நாமல் கருணாரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே ஆகியோரின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.