செய்திகள்உள்நாட்டுயாழில் 150 கிலோ கஞ்சா மீட்பு

யாழில் 150 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் நேற்றிரவு இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles