அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்று இன்று (23) அதிகாலை 3 மணியளவில் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆடை விற்பனை நிலையத்தை வழமை போல நேற்று இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதை அருகிலுள்ள பொது மக்கள் அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மேல் மாடியை கொண்ட கடை தொகுதி முற்றாக ஏரிந்துள்ளதுடன் சுமார் 5 கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.