Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டக்கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

சட்டக்கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன.

இதில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles