சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முதன்முறையாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் யுக்ரைன் படையெடுப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
சீன அதிபரின் விஜயம் அமைதிக்கான விஜயம் என அழைக்கப்படுவதுடன், யுக்ரைன் மீதான படையெடுப்பை தடுக்கும் வகையில் சீன ஜனாதிபதி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.