Tuesday, July 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் விவசாயிகளுக்கு இலவச சேற்று உரம்

இன்று முதல் விவசாயிகளுக்கு இலவச சேற்று உரம்

இலங்கையிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் மூன்று பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எகிப்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 36,000 மெட்ரிக் டன் உரம் நேற்று (19) விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதன்படி, மூன்று பருவங்களுக்குப் பிறகு, முதல் இருப்பு சேற்று உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல் தொகுதியாக 11,537 மெற்றிக் டன் உரம் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, உர இருப்புகளை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles