எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவை ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண பேருந்துகள் மற்றும் அரை சொகுசு பேருந்துகள் என்ற வித்தியாசத்தை கடைபிடிக்காமல் பயணிகளுக்கு ஏற்படும் அநீதிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.