Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி - முச்சக்கர வண்டி விபத்து: 13 பேர் காயம்

லொறி – முச்சக்கர வண்டி விபத்து: 13 பேர் காயம்

பன்வில, நாரம்பனாவ, ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாரம்பனையிலிருந்து சென்ற சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த 11 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவருமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லொறியின் சாரதியும் முச்சக்கரவண்டியும் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles