Sunday, October 12, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை தொடர்பான IMF இன் அறிவிப்பு மார்ச் 21 வெளியாகும்

இலங்கை தொடர்பான IMF இன் அறிவிப்பு மார்ச் 21 வெளியாகும்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான தனது, விரிவாக்கப்பட்ட நிதியுதவி செய்வதற்கான உடன்படிக்கை குறித்த அறிவிப்பை மார்ச் 21 ஆம் திகதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து இருதரப்பு கடன் வழங்குனர்களும் கடன் மறுகட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளனர்.

இந் நிலையில் இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டம் மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் மேற்கொள்ளப்படும்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, நான்கு ஆண்டுகளில் ஒன்பது தவணை கடனின் முதல் தவணையை வெளியிட ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 22 ஆம் திகதி முதல் தவணையாக இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles