Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயத் துறைக்கான உலக வங்கியின் ஆதரவு 18 மாதங்களுக்கு நீடிப்பு

விவசாயத் துறைக்கான உலக வங்கியின் ஆதரவு 18 மாதங்களுக்கு நீடிப்பு

இலங்கையின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆதரவை மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் இலங்கை வந்த உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், விவசாய அமைச்சரான மஹிந்த அமரவீரவுடன் இத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடிய போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தற்போது பெரும் பங்காற்றுவதால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு உலக வங்கிக் குழுவிடம் விவசாய அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, இந்த ஆண்டு மே மாதம் முதல் மேலும் 18 மாதங்களுக்கு இத்திட்டத்தை நீடிப்பதற்கு 30 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles