Sunday, February 1, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடக்க வாய்ப்பில்லையாம்

ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடக்க வாய்ப்பில்லையாம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடக்கும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFEREL) தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட புறக்கணித்து வருவது வருந்தத்தக்கது.

அரசாங்கம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

நீதிமன்ற தீர்ப்புகளைக்கூட அலட்சியம் செய்யும் நிலைக்கு அரசு வந்துவிட்டது.

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சமநிலை இப்போது முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்றார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles