Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸஹ்ரானின் மனைவிக்கு கடும் நிபந்தனையில் பிணை

ஸஹ்ரானின் மனைவிக்கு கடும் நிபந்தனையில் பிணை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 4 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏப்ரல் 21 தாக்குதல்தாரி ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹதியாவுக்கு, கடுமையான நிபந்தனைகளுடனான பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபரை 25000 ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபா அடங்கலான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிணை நிற்பவர் மற்றும் ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி ஆகியோர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் மே மாதம் 17 மற்றும் 18 திகதிகளில் குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles