Saturday, September 20, 2025
31.1 C
Colombo
செய்திகள்உலகம்நைஜீரியாவில் ரயிலுடன் பேருந்து மோதி கோர விபத்து - 6 பேர் பலி

நைஜீரியாவில் ரயிலுடன் பேருந்து மோதி கோர விபத்து – 6 பேர் பலி

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று ரயில் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று லாகோசில் உள்ள இகேஜா பகுதியில் இன்ட்ரா-சிட்டி ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் உயிரிழந்தனர். 84 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து சாரதி போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய நகரங்களில் பொதுவாக போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இது போன்ற விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன.

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோசில், விபத்துக்களைத் தடுக்க சமீப ஆண்டுகளில் கடுமையான அபராதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது கடுமையான பிரச்சனையாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles