Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 6.6 மில்லியன் டொலரை வழங்கிய ஜப்பான்

இலங்கைக்கு 6.6 மில்லியன் டொலரை வழங்கிய ஜப்பான்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகளை வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்திற்கு கூடுதலாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியின் மூலம், உலக உணவுத் திட்டம் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுக் கூடைகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத் தேவைகளில் பாதியை இரண்டு மாதங்களுக்குப் பூர்த்தி செய்யும்.

குறித்த நிதியுதவியானது, 4 மாத காலத்திற்கு திரிபோஷா உற்பத்திக்காக சோளம் மற்றும் சோயா கொள்வனவு பயன்படுத்தப்படும், இது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகியதிலிருந்து ஜப்பானிய அரசாங்கம், உலக உணவு திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இந்தநிலையில் நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதற்கு குறித்த உதவி பயன்படுத்தப்படுகிறது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles