Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உலகம்மனைவியின் உடலை துண்டாக்கி நீர் தொட்டியில் வீசிய கணவன்

மனைவியின் உடலை துண்டாக்கி நீர் தொட்டியில் வீசிய கணவன்

சத்தீஸ்கரில் பெண்ணொருவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டாக்கி நீர் தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்ற நபர், தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபத்தில் மனைவியைக் கொன்றஅவர், உடல் பாகங்களை துண்டாக்கி வீட்டின் மேல் உள்ள நீர் தொட்டியில் வீசியுள்ளார்.

இதனிடையே, அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், அண்டை வீட்டார் பொலிஸாருக்கு புகாரளித்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்டு சோதனையில், நீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது தெரியவந்தது.

பின்னர் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles