Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாணந்துறை வர்த்தகர் கொலை : இருவர் கைது

பாணந்துறை வர்த்தகர் கொலை : இருவர் கைது

பாணந்துறை டி.டிமன் சில்வா மாவத்தையில் சொகுசு ஜீப்பில் பயணித்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்றது.

கிரில்லவல, பங்களாவத்தையில் வசிக்கும் 57 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் ஜீப் வண்டியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், கொலையை மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் ஆகிய இருவரும் நேற்று (05) காலை தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்மெல்லகஹ பகுதியில் வைத்து களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டுக்காக வந்த மோட்டார் சைக்கிள் வாதுவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 40 வயதுடைய ஜின்மெல்லகஹ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் தொடர்பான தகவல்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles