யாழ்தேவி ரயில் தடம் புரண்டதன் காரணமாக மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் மஹவ நிலையத்திற்கு அருகில் இரண்டாகப் பிரிந்தது.
இதனால், மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதியும் தடைபட்டது.
பின்னர், தடம் புரளாமல் இருந்த ரயிலின்; முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.