உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில், இன்றைய தினம் அவர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் மீண்டும் கூடி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
